தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் திருச்சி இசைப்பள்ளியில் இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சவகர் மன்ற திட்ட அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் சவகர் சிறுவர் மன்றம் ஆகியவை இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் இன்று முதல் தொடங்குகிறது.
முகாமில் ஓவியம் வரைதல், குரலிசை, பரத நாட்டியம், கராத்தே ஆகிய கலைகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். மே 17 வரை நடத்தப்படும் முகாமில் திருச்சி மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் இன்று காலை 9 மணிக்கு ஸ்ரீரங்கம், கலை பண்பாட்டு வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு நேரில் வரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment