வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி வேலூர் மற்றும் திருப்பத்தூரில் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் அன்று காலை 9.30 மணிக்கும், வேலூரில் ஊரிசு கல்லூரியில் பிற்பகல் 2 மணிக்கும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் சேலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் அ.ஜெயபிரகாஷ், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆர்.அருணகிரி, வேலூர் பட்டய கணக்காயர் ராஜவேலு, திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் பி.பிரியதர்ஷினி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் டி.மனோகரன் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியர் எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பதை விளக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.சுப்பிரமணி செய்து வருகிறார்.
No comments:
Post a Comment