புதிய இளநிலை தொழில் பட்டப் படிப்பைத் தொடங்குவதற்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிடமிருந்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.
அதிகரித்து வரும் திறன் மிக்க மனித ஆற்றலின் தேவையைக் கருத்தில் கொண்டு "தேசிய தொழில் கல்வித் தகுதித் திட்டத்தின் கீழ் மூன்றாண்டு இளநிலை தொழில் பட்டப் படிப்பு, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பு மற்றும் ஓராண்டு பட்டயப் படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் படிப்புகளைத் தொடங்க முன்வரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு ஆய்வகங்கள் மற்றும் பயிலரங்குகள் அமைப்பதற்கான தொடக்க நிதி, ஆசிரியர்களுக்கான ஊதியம் என மூன்று ஆண்டுகளுக்கு ரூ.1.85 கோடி நிதியுதவியை யுஜிசி வழங்க உள்ளது.
இந்தப் படிப்புகளைத் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகள் வரும் 15-ஆம் தேதிக்குள் அதற்கான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment