இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் சார்பில் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக இந்த நிலையத்தின் உதவி இயக்குநர் என்.சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிண்டியில் உள்ள இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருள்களான பாக்கு மட்டைத் தட்டுகள், காகிதப் பைகள் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், துரித உணவுப் பொருள்களான பானிபூரி, பழச்சாறுகள், வற்றல் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். பயிற்சியில் சேர கல்வி தடையில்லை. 18 வயது நிரம்பிய ஆண்கள் பெண்கள் சேரலாம்.
மாற்றுத் திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பயிற்சி கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. பயிற்சியின் போது தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள், வங்கிக் கடன் பற்றிய வழி முறைகள் ஆகியவை வழங்கப்படும்.
பயிற்சியின் இறுதியில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940318891, 9790754446 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment