Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 20 March 2014

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு நிறுத்திவைப்பு

உயர் கல்வித் துறை உத்தரவைத் தொடர்ந்து அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த பேராசிரியர் பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பச்சையப்பன் அறக்கட்டளை அதன் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 123 உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதவற்கான நேர்முகத் தேர்வை வரும் 26,27,28 தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தது. இது தொடர்பாக "தினமணி'யில் திங்கள்கிழமை (மார்ச் 17) செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உயர் கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், உயர் கல்வித்துறை மறு அறிவிப்பை வெளியிடும் வரை, பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பச்சையப்பா அறக்கட்டளை செயலர் பி. ராஜகோபாலன் கூறியது:
உயர் கல்வித்துறை உத்தரவைத் தொடர்ந்து, பேராசிரியர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை அறக்கட்டளை நிறுத்திவைத்துள்ளது. மறு அறிவிப்பு வந்த பிறகே நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றார்.

No comments: