முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிசம்பர் 28) நடைபெற்றது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்தி:
முதுகலை ஆசிரியர் பணி நிலையில், வட்டார வளமையங்களில் பணிபுரிந்து வரும் 47 வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் 17 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் செய்து ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 897 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டு உடன் ஆணை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment