பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2013-14-ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் விவரம்:
கவிதைப் போட்டி:
முதல் பரிசு - ச. சரண்யா ( கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பள்ளி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி)
2-வது பரிசு - ரா. பூமணி (சேலம் மேட்டூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி)
3-வது பரிசு - சி. பூவரசன் (ஈரோடு கவுந்தம்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்)
கட்டுரைப் போட்டி:
முதல் பரிசு - ச. பவித்ரா (மதுரை ஜோதி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி),
2-வது பரிசு - ஆர். வித்யா (தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பிளஸ் 1 மாணவி),
3-வது பரிசு - கெ. சச்சின் (கன்னியாகுமரி மணவாளக்குறிóச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்)
பேச்சுப் போட்டி:
முதல் பரிசு - மு.பு. லாவண்யா (புதுக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி)
2-வது பரிசு - சி. அலிமுதீன் (பெரம்பலூர் மௌலானா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்),
3-வது பரிசு - மு. லெனின்குமார் (ராமநாதபுரம் தர்மவாவன விநாயகர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்)
மாநில அளவில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்கள் விவரம்:
கவிதைப் போட்டி:
முதல் பரிசு - ரா. நீலாவதி (நாகை பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் பயிற்சிப் பள்ளி),
2-வது பரிசு - பூ. ரஞ்சிதா (கோபிச்செட்டிப்பாளையம் சாரதா கலை, அறிவியல் கல்லூரி)3-வது பரிசு - க. கலைவண்ணன் (பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி)
கட்டுரைப் போட்டி:
முதல் பரிசு - ரா. கண்ணன் (திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி),
2-வது பரிசு - சுவாதி பிரியா (ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை, அறிவியல் கல்லூரி),
3-வது பரிசு - கோ. சாந்தகுமாரி (விழுப்புரம் பவுட்டா கலை, அறிவியல் கல்லூரி)
பேச்சுப் போட்டி:
முதல் பரிசு - க. அபிதா (திருவண்ணாமலை கம்பன் கலை, அறிவியல் கல்லூரி),
2-வது பரிசு - க. ஆதிலிங்கம் (மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி),
3-வது பரிசு - ரா. கார்த்திக் ராஜா (திருவாரூர் சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரி)
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 15,000, 2-வது பரிசு ரூ. 12,000, 3-வது பரிசு ரூ. 10,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment