இளம் சிறார் தற்கொலையை தடுக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசகர் பயிற்சி வழங்க வேண்டும் என்று மனநல மருத்துவர் ஸ்ரீநிவாச கோபாலன் யோசனை கூறியுள்ளார்.
இலக்கிய களம் அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் ஆன்டர்சன் பள்ளி வளாகத்தில் இளம் சிறார் தற்கொலை தடுப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் மேலும் கூறியதாவது:
தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்வது அதிகரித்து வருகிறது.
இந்த நிலைக்கு பெற்றோரும், பள்ளிகளும் தான் காரணம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைக ளுக்கு, அவர்களின் அறிவு மற்றும் புரிந்துக் கொள்ளும் திறனை அறியாமல் அதிக பொறுப்புகளை வழங்குகின்றனர்.
குழந்தைகளின் தனிப்பட்ட திறனை கண்டறிந்து, அதை வளர்க்காமல், பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் நபராக குழந்தைகளைப் பார்க்கின்றனர்.
பள்ளிகளும் போட்டிகளை மையமாகக் கொண்ட கல்வியை போதிக்கின்றன. போட்டியில் வெல்ல வேண்டும் என்று மாணவர்களை நிர்பந்திக்கின்றனர்.
இதன் விளைவாக சிறார்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தற்கொலை அதிகரிக்கிறது. இதைத்தடுக்க, பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நடத்த வேண்டும். அனைத்து மாணவர் களுக்கும் பள்ளிகளில் மனநல ஆலோ சனைகளை வழங்க வேண்டும். அதற்கு பள்ளி ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசகர் பயிற்சியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இலக்கிய களம் பொறுப்பாளர்கள் எக்பர்ட் சச்சிதானந்தம், அமுத கீதன், சமூக ஆர்வலர் பவனந்தி மற்றும் பல்வேறு சமூக அமைப் புகளைச் சேர்ந்தவர்கள், சிறார் தற்கொலையை தடுக்கவும், சிறார்களின் மன அழுத்தத்தை போக்கவும் அவர்களது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment