Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 24 December 2013

+2 மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ் - உயிரியல்

பிளஸ் டூ  தேர்வு நேரத்தில் கொடுக்கப்படும் அறிவுரைகளை முன்னதாகவே கொடுத்திருந்தால், தேர்வுக்கு மேலும்  நன்றாகத் தயாராகி இருப்போமே என்று நினைக்கும் மாணவர்களுக்காக  திறமை வாய்ந்த ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்குகிறார்கள். இந்த இதழில்  உ யிரியல்  பாடத் தேர்வை வெற்றிகரமாக எழுத சக்ஸஸ் டிப்ஸ்:

உயிரியல் என்பது, தாவரவியல் மற்றும் விலங்கியல் என்ற இரு பாடங்களை உள்ளடக்கியது.  திட்டமிட்டுப் படித்தால் உயிரியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெறுவது மிக எளிது. உயிரியல் பாடத்தில் ப்ளு பிரிண்ட்படி பாடங்களைத் தயார்செய்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3, 5 மற்றும் 10 மதிப்பெண்கள் வினாக்களைக் கொண்ட பட்டியலைத் தயார்செய்ய வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள வினாத்தாள் புத்தகத்தில் எப்படி வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வினாக்களுக்கு விடையளிக்கும்போது  கீ பாயிண்ட்டுகளுடன் தெளிவாகவும், சுருக்கமாகவும், படங்கள் இருந்தால் தெளிவான பாகங்களுடனும், துணைத் தலைப்புகள், எடுத்துக்காட்டுகள், முக்கிய கீ பாயிண்ட்டுகளுக்கு அடிக்கோடிட்டும் விடையளிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பொதுத்தேர்வு மாதிரி 75 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயார் செய்து தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும். தேர்வு எழுதி முடித்தவுடன் என்னென்ன தவறுகள் செய்துள்ளோம் எனப் பார்த்து மீண்டும் தவறு நிகழாவண்ணம் தயார் செய்யவேண்டும்.

 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற, தேர்வில் சரியான வினாக்களைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது. எந்த வினாவை தேர்வு செய்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என ஆராய்ந்து வினாவைத் தேர்வு செய்வது முக்கியம். ஒரு மதிப்பெண் வினாவிற்கு விடையைத் தேர்வு செய்ய பதற்றப்படாமல் பதிலை உறுதிசெய்துகொண்டு பிறகு எழுதவேண்டும்.

 வினாத்தாளில் வினா எப்படிக் கேட்கப்பட்டுள்ளது, இதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என யோசித்து பதில் அளிக்கவேண்டும். அவசரத்தில் தெரிந்த வினாக்களுக்கே பொருத்தமில்லாத விடைகளை எழுதிவிட வாய்ப்புள்ளது. எனவே பதற்றமாகச் செயல்படாதீர்கள்.

தாவரவியல்

 அனைத்துப் பாடங்களிலும் உள்ள மூன்று மதிப்பெண்கள், ஐந்து மதிப்பெண்கள், பத்து மதிப்பெண்கள் வினாக்களைப் படித்தாலே பெரும்பாலான 1 மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை எழுதிவிடலாம்.

 ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாட்டியல் பாடத்தில் மலர் வாய்ப்பாடு எழுதும்போது சற்று கவனத்துடன் எழுத வேண்டும். இதில் மலரின் பாகங்களின் எண்ணிக்கையை சரியாக எழுதவேண்டும். இதில் மலரின் பாகங்கள் இணைந்ததா (அ) இணையாததா, மேல்மட்ட சூல் பை, கீழ்மட்ட சூல் பை இவற்றைக் குறிக்கும் கோடு சரியாகப் போடப்பட வேண்டும். புத்தகத்தில் உள்ளபடி எழுத வேண்டும்.

ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாட்டியல் பாடத்தில் மலர்ப் படம் வரையும்போது மேல்பக்கமாக மலரின் அச்சு கண்டிப்பாக வரைய வேண்டும். இதில் மலரின் பாகங்கள் இணைந்ததா (அ) இணையாததா எனத் தெளிவாக குறிக்கப்படவேண்டும்.

 ஆஞ்சியோஸ்பெர்ம்களின் வகைப்பாட்டியல் பாடத்தில் பொருளாதார முக்கியத்துவம் எழுதும்போது இருசொல் பெயர், சாதாரணப் பெயர், பயன்படும் பாகம் மற்றும் பயன்கள் ஆகியவற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும்.  தாவர உள்ளமைப்பியல், தாவர செயலியல் பாடங்களில் வேறுபடுத்துக போன்ற வினாக்களுக்கு விடை எழுதும்போது பலரும் விடையை மாற்றி வலப்புறம் எழுத வேண்டியதை இடப்புறமும், இடப்புறம் எழுத வேண்டியதை வலப்புறமும் எழுதிவிடுகின்றனர். இதுபோன்ற வினாக்களுக்கு விடை எழுதும்போது சற்று விழிப்புடன் எழுத வேண்டும்.

 தாவர உள்ளமைப்பியல் பாடத்தில் 10 மதிப்பெண்கள், 5 மதிப்பெண்கள் வினாக்களுக்கு படம் வரையும்போது, பொது அடிப்படை படம், பெரிதாக்கப்பட்ட ஒரு பகுதி என்று இரண்டினையும் வரைய வேண்டும். தாவர உள்ளமைப்பியல், செல் உயிரியல் மற்றும் மரபியல் பாடங்களில் 3 மதிப்பெண்களுக்கான வினாவில் படம் வரைந்து கண்டிப்பாக பாகங்களைக் குறிக்கவேண்டும்.

 செல் உயிரியல் மற்றும் மரபியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் வினா எழுத, தெளிவாகவும் முழுமையாகவும் படிக்க வேண்டும். உயிர் தொழில்நுட்பவியல் பாடத்தில் உள்ள 5 கட்டுரை வினாக்களைத் தயார் செய்துவிட்டால் இப்பாடத்திலிருந்து அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதி இப்பாடத்திற்கான 20 மதிப்பெண்களைப் பெற்று விடலாம். இப்பாடத்தில் 10 மற்றும் 5 மதிப்பெண்கள் வினாக்களுக்கு விடை எழுதும்போது துணைத் தலைப்புகள், படங்கள் பாகங்களுடன் தெளிவாக இருக்கவேண்டும். தாவர செயலியல் பாடத்தில் அதிகபட்சமாக 32 மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரலாம். இப்பாடத்தில் 10 மதிப்பெண்கள் வினாவில் ஏதாவது ஒழுக்க வரைபடம் வரைய வேண்டி இருக்கும். இரண்டு பொருட்கள் உருவாக்கத்தின் இடையில் நொதிகளின் பெயர்கள் மற்றும் வேறு ஏதாவது வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுகிறதா (அ) தேவைப்படுகிறதா என்பதை சரியாக எழுத வேண்டும்.

 ஒழுக்க வரைபடத்தில் எத்தனை நிகழ்வுகள் இருக்கின்றன என்பதை எழுதிவிட்டு சரிபார்க்க வேண்டும். சில வினாக்களுக்கு வேதி வினைகள் இருந்தால் கண்டிப்பாக அவற்றை எழுத வேண்டும்.

அனைத்துப் பாடங்களிலும் 10 மதிப்பெண்கள் வினாவில் ஏதாவது ஒழுக்க வரைபடம் வரைய வேண்டி இருந்தாலும், செயல்நுட்பங்கள் கேட்கப்பட்டிருந்தாலும் அதை எழுதும் முன் கண்டிப்பாக வரையறை எழுத வேண்டும்.

 மனிதநல மேம்பாட்டில் உயிரியல் பாடப் பகுதியை தயார் செய்யும்போது விடைகளை ஒப்பீட்டு முறையில் கட்டங்களிட்டு தயார் செய்தால் மனதில் எளிதில் பதியும். இதை எந்த வினாவில் கேட்டாலும் எளிதாக எழுதி விடலாம் (உதாரணம்) மருத்துவ தாவரங்களும் மருந்துகளும், சாதாரணமான மருத்துவத் தாவரங்கள், மருத்துவத்தில் நுண்ணுயிரிகள், பயிர்த் தாவர நோய்கள்.

தாவரவியலில் பாடவாரியாக கேட்கப்படும் முக்கியமான கேள்விகள்:

1. ஆஞ்சியோஸ்பெர்ம் வகைப்பாட்டியல்: வகைப்பாட்டியலின் நோக்கங்கள், பிற்கால வகைப்பாட்டியலில் ஏன் மலரின் பண்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, செயற்கை வகைபாடு ஏன் இனப்பெருக்க வகைபாடு என அழைக்கப்படுகிறது, பரிசோதனை வகைப்பாட்டியலின் நோக்கங்கள், இருசொல் பெயரிடுதல் முறை, ஆபாகா துணி, ஹெர்பேரியப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வகைப்பாடு வகைகள், யுஃபோர்பியேசி பெண் மலரை விவரி, செயற்கை வகைப்பாடு குறைகள், மானோகிளமைடியே, புறப்புல்லி வட்டம், அட்ரோபின் என்றால் என்ன?, கிளடோடு என்றால் என்ன?, மானோகார்பிக் பல்லாண்டு தாவரங்கள், பொய்த் தண்டு, அகில உலக பெயர் சூட்டுதல் சட்டத்தின் முக்கிய அம்சங்கள், ஹெர்பேரியம் முக்கியத்துவம், நான்கு குடும்பங்களின் பொருளாதார முக்கியத்துவம், யூஃபோர்பியேசி மஞ்சரி வகைகள், மியூசாராவினாலா தாவரங்களை வேறுபடுத்துக, பெந்தம் ஹுக்கர் வகைப்பாடு விவரி, கலைச் சொற்களால் விவரி: ஹைபிஸ்கஸ் ரோசா சைனன்சிஸ், டாட்டுரா மெட்டல், ரெஸினஸ் கம்யூனிஸ், மியூசா பாரடிஸியகா.

 2. தாவர உள்ளமைப்பியல்: ஸ்கிளிரைடு, நார்கள் வேறுபடுத்துக, ஆக்குதிசுவின் பண்புகள், மேற்பரப்பு நார்கள், லிப்ரிஃபார்ம் நார்கள், பாஸ்ட் நார்கள், இலை இடைத் திசு (மீசோஃபில்), பித்/மெடுல்லா/அகணி, காஸ்பாரியன் பட்டைகள், வழிச்செல்கள், யூஸ்டீல், ஸ்டார்ச் அடுக்கு, கற்றைத் தொப்பி, கற்றை உறை,  மெடுல்லரி கதிர்கள், மேல்கீழ் வேறுபாடு கொண்ட இலைகள், கற்றை உறை (அ) எல்லை பாரன்கைமா, இருபக்கமும் ஒத்த அமைப்புடைய இலை, ஹைப்போடெர்மிஸ், ஆக்குத்திசுவின் வகைப்பாடு, பாரன்கைமா திசுவின் வகைகள், கோலன்கைமா வகைகள், ஸ்கிளிரைடு வகைகள், வாஸ்குலார் திசுக்களின் வகைகள், இருவித்திலை வேரின் கு.வெட்டு, இருவித்திலை இலையின் கு.வெட்டு, ஒருவித்திலை வேர்-இருவித்திலை வேர் வேறுபடுத்துக, புறத்தோல் திசுத் தொகுப்பின் பணிகள், சைலம் டிரக்கீடு, சைலம் சைலக் குழாய், புளோயம் சல்லடைக் குழாய்க் கூறுகள், ஒருவித்திலைத் தண்டு குறுக்குவெட்டு, இருவித்திலைத் தண்டு குறுக்கு வெட்டு, இருவித்திலைத் தண்டு குறுக்குவெட்டு மற்றும் ஒருவித்திலைத் தண்டு குறுக்குவெட்டு வேறுபடுத்துக.

3. செல் உயிரியல் (ம) மரபியல்: சாட் குரோமோசோம், டீலோமியர்கள், சூப்பர் நியூமரி குரோமோசோம்கள், பால்பியானி வளையங்கள், ஜீன் ஜீனோம் வரையறு, ஒரு ஜீன் ஒரு நொதிக் கோட்பாடு என அழைக்கப்படக் காரணம், குறுக்கேற்றம் முக்கியத்துவம், மரபு வரைபடம் (அ) பிணைப்பு வரைபடம், உயிர்வேதி திடீர் மாற்றம், கொல்லி திடீர் மாற்றம், மியூட்டாஜீன்கள், சிஸ்ட்ரான் ரெக்கான் மியூட்டான்,  சார்க் ஆஃப் விதியை எழுது, ஓகசாகி துண்டுகள் என்றால் என்ன?, மோனோசோமி என்றால் என்ன?, நல்லி சோமி என்றால் என்ன?,  மரபு வரைபடம் முக்கியத்துவம் யாது?, RNA  நான்கு கரங்கள் யாது?, குரோமோசோம் அமைப்பு, குரோமோசோம் வகைகள், ஜீன் (அ) புள்ளி திடீர் மாற்றம், திடீர் மாற்றத்தின் முக்கியத்துவம், குரோமோசோம் பிறட்சிகள், பிளாய்டி, DNA  வாட்சன் கிரிக் மாதிரி, DNA  இரட்டிப்பாதலை விவரி, t RNA அமைப்பினை விவரி, DNA, RNA  வேறுபடுத்துக, திடீர் மாற்ற தூண்டிவிகள் (அ) மியூட்டாஜீன்கள்.

4. உயிர்த் தொழில்நுட்பவியல்: மரபு பொறியிலின் அடிப்படை பொருட்கள், உயிர்த் தொழில்நுட்பவியலில் ஈ.கோலையின் பங்கு, அயல்ஜீனைப் பெற்ற தாவரங்கள், அயல்ஜீனைப் பெற்ற தாவரங்கள் உதாரணம், உயிரிய சீரமைப்பாக்கம், தனிசெல் புரதம், தனிசெல் புரத உற்பத்திக்குப் பயன்படும் ஆல்கா, பூஞ்சை, பாக்டீரியா, மூலக்கூறு ஒட்டுதல், இந்திய உயிர் தொழில்நுட்ப மையங்கள், மறுசேர்க்கை DNA , உயிரி பூச்சிக்கொல்லி, DNA  எவ்வாறு துண்டாக்கப்படுகிறது, மறுசேர்க்கை DNA  பயன்கள், மரபுப் பொருள்களை இடம் மாற்றி அமைப்பதின் பயன்கள், ஆனந்த மோகன் சக்கரவர்த்தியின் கண்டுபிடிப்பு, ஜீன் இடம் மாற்றியமைக்கப்பட்ட நுண்ணுயிரிகளை சுற்றுப்புறச்சூழலில் வெளியிடுவதால் ஏற்படும் நன்மைகள், தாவரத் திசு வளர்ப்பு அடிப்படைக் கருத்துக்கள், புரோட்டோ பிளாசங்களை தனிமைப்படுத்தும் முறைகள், அயல்ஜீனைப் புகுத்தும் முறைகள், மரபுப் பொறியியலின் அடிப்படை செயல்நுட்பங்கள், தாவரத் திசு வளர்ப்பு அடிப்படை செயல்நுட்பங்கள், புரோட்டோபிளாச இணைவு.

5. தாவரசெயலியல்: ஒளிச்சேர்க்கை ஒட்டுமொத்த வினை,  நீர் ஒளி பிளத்தல், ஒளி பாஸ்பரிகரணம், சுழற்சி பாஸ்பரிகரணம் நடைபெற நிபந்தனைகள், இருவடிவ பசுங்கணிகங்கள், ஒளிச் சுவாசம் மற்றும் இருள் சுவாசம் வேறுபடுத்துக, பிளாக்மென் கட்டுப்படுத்தும் காரணி, முழு ஒட்டுண்ணி, பகுதி ஒட்டுண்ணி, ஹாஸ்டோரியாக்கள், சுவாசித்தல் ஒட்டுமொத்த வினை, ATP  அமைப்பினை படம் வரைக,  சுவாச ஈவு, சமநிலைப்புள்ளி, சிக்மாய்டு வளைவு, ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரிகரணம், பார்தினோகார்பிக் கனிகள், பக்கானே (அ) கோமாளித்தனமான நோய், போல்டிங், குளிர்ப்பதனம், குளிர்ப்பதன நீக்கம், ரிச்மாண்ட்லாங் விளைவு, வெலாமன் திசு, காற்றில்லா சுவாசத்தின் சுவாச ஈவு முடிவற்றது ஏன்?, ஒளிச்சேர்க்கை முக்கியத்துவம், பசுங்கணிகத்தின் அமைப்பு, ஒளிச்சேர்க்கை நிறமிகள், சுழற்சி சுழலா பாஸ்பரிகரணம் வேறுபடுத்துக, C4 ஒளிச்சேர்க்கை C3, C4 ஒளிச்சேர்க்கை வேறுபடுத்துக, ஆய்வுக் குழாய் புனல் சோதனை, கேனாங்கின் ஒளித்திரை ஆய்வு, தொற்றுத் தாவரங்கள், பிறசார்பு ஊட்டமுறை, பூச்சியுண்ணும் தாவரம் (ட்ரஸீரா), வேதிசேர்க்கை பாக்டீரியா, கேனாங்கின் சுவாசமானி சோதனை, பென்டோஸ்பாஸ்பேட் வழித்தடத்தின் முக்கியத்துவம், கூன்குடவை சோதனை, லீவர் ஆக்ஸானோமீட்டர் சோதனை, எலெக்ட்ரான் கடத்து சங்கிலி, ஆக்ஸினின் வாழ்வியல் விளைவுகள், ஜிப்ரலீன் வாழ்வியல் விளைவுகள், சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள், எத்திலின் வாழ்வியல் விளைவுகள், அப்ஸிஸிக் அமிலம் வாழ்வியல் விளைவுகள், ஒளிகாலத்துவம் வகைகள், பைட்டோகுரோம் மலர்தலை, ஒளிர்வினை, இருள்வினை (கால்வின் சுழற்சி) C3 ஒளிச்சேர்க்கை, ஒளி சுவாசம் (C3 சுழற்சி ), ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கும் காரணிகள், கிளைகாலைஸிஸ் படிநிலைகள், கிரப் சுழற்சி (சிட்ரிக் அமில சுழற்சி), பெண்டோஸ் பாஸ்பேட் வழித்தடம்.

6.    மனிதநல மேம்பாட்டில் உயிரியல்: ஹெட்டிரோஸிஸ் (அ) கலப்பின வீரியம், உயிரி உரங்கள், தழை (அ) பசுமை உரங்கள், மைக்கோரைசா, என்டோடிராபிக் மைக்கோரைசா எக்டோடிராபிக் மைக்கோரைசா வேறுபடுத்துக, மண் சீர்திருத்தம், போர்டாக்ஸ் கலவை, உயிரி பூச்சிக்கொல்லிகள், போபால் அவல நிகழ்ச்சி, நுண்ணுயிர் பூச்சிக்கொல்லிகள், பாக்டீரிய பூச்சிக் கொல்லிகள், மரபுமாற்றம் செய்யப்பட்ட உணவு, உண்ணத்தக்க தடுப்பூசிப் பொருட்கள், உண்ணத்தக்க ஆன்டிபாடிகள், உண்ணத்தக்க இன்டர்பெரான்கள், உயிரிவழிப்போர், உயிரிப்பொருள் கொள்ளை, உயிரிப்பொருள் காப்புரிமை, உயிரி மருந்துகள், ஹாட்ஜர் (அ) எலும்பு இணைவி, அட்டாமிட்டா 2, தவிட்டு எண்ணெய் (ம) பயன்கள், ஹியுமிலின், தாவர பயிர்ப் பெருக்கத்தின் குறிக்கோள்கள், தாவர பயிர்ப்பெருக்க முறைகள், உயிரி உரங்களின் பயன்கள், நோய் அறிகுறிகள், தடுப்புமுறைகள் 1) நெல், 2) நிலக்கடலை, 3) எலுமிச்சை, 4) நெல் (வை), உயிரி பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன, மரபுமாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகள், உயிரிப்பொருள் கொள்ளை, உயிரிப்பொருள் காப்புரிமை, தொடர் பயன்தரும் வேளாண்மை, மருத்துவத் தாவரங்கள், மருத்துவ நுண்ணுயிரிகள், நெல், நிலக்கடலை, பருத்தி, தேக்கின் பொருளாதார முக்கியத்துவம்.

விலங்கியல்

முதல் பாடத்தில் 10 மற்றும் 5 மதிப்பெண்களுக்கான வினாக்களைப் பட்டியலிட்டு தேர்விற்குத் தயார் செய்யவேண்டும். இப்பாடத்துக்கான படங்களை நன்கு வரைந்து பழக வேண்டும். இப்பாடப் பகுதியில் விளக்கம் அதிகமாக இருக்கும். எனவே தேர்விற்குத் தயார் செய்யும்போது முக்கியக் குறிப்புகளைத் தயாரித்து அதைப் படிக்கவேண்டும்.

நுண்ணுயிரியல் பாடப் பகுதியில் மருத்துவ நுண்ணுயிரியாளர்கள் பற்றிய விவரங்கள், கண்டுபிடிப்புகளைப் பற்றி பட்டியலிட்டுப் படித்தால் எளிதாக இப்பாடப் பகுதியில் மதிப்பெண்கள் பெறலாம்.

வைரஸ், பாக்டீரியா, புரோட்டோ சோவா மற்றும் லார்வா போன்றவற்றால் ஏற்படும் நோய்களை தெளிவாகப் பட்டியலிட்டுப் படிக்க வேண்டும்.  நுண்ணுயிரியல், நோய்த் தடைக் காப்பியல், தற்கால மரபியல் மற்றும் பரிணாமக் கோட்பாடுகள் பாடங்களிலிருந்து தலா 1 ஐந்து மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கப்படும். இந்த வினாக்களைப் புரிந்து படித்தால் விலங்கியல் பிரிவில் 3 ஐந்து மதிப்பெண்கள் வினாக்களுக்கு எளிதில் பதில் எழுதி முழு மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.

 சுற்றுச்சூழல் அறிவியல், பயன்பாட்டு உயிரியல் பாடங்களிலிருந்து தலா ஒரு 10 மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கப்படும். முதல் பாடத்தினை ஒப்பிடும்போது மிக எளிய பாடம், குறைவான வினாக்களைக் கொண்டது. இந்தப் பாடங்களை நன்கு புரிந்து படித்தால் 20 மதிப்பெண்களை எளிதில் பெற்றுவிடலாம். படங்களை வரையும்போது அதிக நேரம் எடுத்து மிக அழகாக வரைய வேண்டும் என்பதில்லை . விரைவாக, தெளிவாக, பாகங்களுடன் வரைந்தால் போதும்.

விலங்கியலில் பாடவாரியாகக் கேட்கப்படும் முக்கியமான கேள்விகள்:

1. மனிதனின் உடற்செயலியல்: வைட்டமின்களும் குறைபாடுகளும், உடல் பருமன், சிறு குடலில் செரித்தல், பற்கால்வாய் சிகிச்சை, குடல் பிதுக்க வகைகள், குடல்வால் அழற்சி, எலும்பு முறிவின் வகைகள், மூட்டுவலியின் வகைகள், ரிக்கட்ஸ் (ம) ஆஸ்டியோமலேசியா, கௌட், தசைச் சுருக்க செயல்முறை, மரண விறைப்பு, மையாஸ்தீனியா கிராவிஸ், உட்சுவாசம், வெளிச் சுவாசம், ஹெரிங் புருயர் செயல்,  இதய இயக்கத் தூண்டல், இதயத் தசை நலிவுறல் நோய், ஆஞ்சியோகிராம், இதயக் குழல் நோய் சிகிச்சைப் பிரிவு, இதய மாற்று அறுவைச் சிகிச்சையில் கட்டுப்பாடுகள், மூளை அமைப்பு (ம) செயல்பாடுகள், நினைவாற்றலின் வகைகள்,  அல்சிமியர் நோய், டயாபடிஸ், கண்களின் குறைபாடுகள், கண் நோய்கள், கேட்டலின் இயக்கமுறை, சிறுநீர் உருவாகும் முறை, மாதவிடாய் சுழற்சி, பிறப்புக் கட்டுப்பாடு, PUFA, குவாசியாக்கர், மாரஸ்மஸ், BMI, CLR,  கார்பஸ் அல்பிகன்ஸ்.

2. நுண்ணுயிரியல்: லூயி பாஸ்டர், இராபர்ட் கோச், ஜோசப் லிஸ்டர், வைரஸ் அமைப்பு , வைரஸ் வளர்ப்பு, வைரஸ் நோய்கள், பாக்டீரியா நோய்கள், அமிபியாஸிஸ், நோயூக்கிகளின் தகவமைப்பு,  சிறந்த வேதி சிகிச்சை மருந்தின் பண்புகள், எய்ட்ஸ் (மற்றும்) கட்டுப்பாடு, WHOˆ எய்ட்ஸ் நோயின் கட்டுப்பாடுகள், சூனோஸிஸ்.

3. நோய்த்தடைக் காப்பியல்:  உடற்செயல் சார்ந்த காரணிகள், தைமஸ், மண்ணீரல் பணிகள், ஹாப்டென், எப்பிடோப், பாரடோப், இம்யுனோகுளோபுலின், கிராப்டின் வகைகள், அல்லோ கிராப்ட் மறுப்பு, தடைகாப்பு மண்டல சீர்குலைவுகள், தீவிர ஒருங்கிணைந்த தடைகாப்புக் குறைவு நோய், லைசோசைம், செல் விழுங்குதல்.

4. தற்கால மரபியல்: கேரியோகிராம், குரோமோசோம் தொகுப்பு வரைபடம் தயாரித்தல், ஏழு தொகுதி குரோமோசோம்கள், குரோமோசோம் தொகுப்பு வரைபடம் பயன்கள், பிளாஸ்மிட், மறுசேர்க்கை டி.என்.ஏ. பயன்கள், சந்ததி வழித்தொடர் ஆய்வு, மரபியல் நோய்கள், புரொட்டியோமிக்ஸ், மனித ஜீனோம் திட்டம் முக்கியத்துவம், குளோனிங் மற்றும் ஒழுக்கம் சார்ந்த நன்மை தீமைகள், ஜீன் சிகிச்சை,  உயிரித் தகவலியல் மற்றும் முக்கியத்துவம், சி.டி.என்.ஏ. நூலகம், எரிதனல் கரி, புரத மாதிரிப் பயன்கள்.

5. சுற்றுச்சூழல் அறிவியல்: மக்கள்தொகைப் பெருக்கம் விளைவுகள், உலகளாவிய வெப்ப உயர்வு - கண்ணாடி வீடு விளைவு, ஓசோன் ஓர் இயற்கைத் தடை விவாதி, இடர்பாடு தரும் கழிவுகள், இடர்பாடற்ற கழிவுகள், உயிரி பல்வகைமையை விளக்கு, ஆற்றல் நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம், வறுமையும்  சுற்றுச்சூழலும், நன்னீர் மேலாண்மை, மேகங்களில் தூவுதல், இந்தியாவிலுள்ள உயிரிமிகு வள இடங்கள்.

6. பயன்பாட்டு உயிரியல்: முக்கிய மாட்டினங்களும் அதன் பண்புகளும், கால்நடை நோய்களும் கட்டுப்படுத்தலும், கோழி வளர்ப்பு இனங்களும் அதன் பண்புகளும், கோழிப் பண்ணை அமைக்கும் முறைகள், மீன் வளர்ப்பிற்குப் பயன்படும் மீன்களின் பண்புகள், மீன் குளங்களை அமைத்தல், தமிழ்நாட்டின் மீன் வகைகள், ஸ்டெதெஸ்கோப் பயன்கள், சிஸ்டோல், டயஸ்டோல், ஸ்பிக்மோ மானோமீட்டர் பயன்கள், ஹீமோ சைட்டோமீட்டர் மற்றும் பயன்பாடுகள், ஈ.சி.ஜி. விளக்குக, சி.டி. ஸ்கேன் விளக்கமும் பயன்களும், எண்டோஸ்கோப்பி வகைகள், பேஸ் மேக்கர், ஆட்டோ அனலைசர்.

7. பரிணாமக் கோட்பாடுகள்: லாமார்க்கின் விதிகள், டார்வின் கோட்பாடுகள், ஹார்டி வீன்பெர்க் சமன்பாடு, சிவல்ரைட் விளைவு,  பல்லுருவ அமைப்பு.

ஜி. சத்தியமூர்த்தி, 
முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ஜெயபுரம், வேலூர் மாவட்டம்.  

No comments: