பணியாளர் தேர்வாணயம் நடத்தும் ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முக்கியத் தேர்வுகளில் ஒன்றான இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் எழுதினர்.
தென் மணடலத்தின் கீழுள்ள தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 206 மையங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதினர்.
காலியிட விவரங்களை பணியாளர் தேர்வாணையம் வெளியிடவில்லை என்றாலும் டெல்லி, அலகாபாத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக காலியிடங்கள் இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
எழுத்துத் தேர்விற்கு பின்னர் தட்டச்சுத் தேர்வு நடத்தப்படும்.
அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்றார் போல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு பணி வழங்கப்படும் என பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment