Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 10 November 2013

IAS இலவசப்பயிற்சியில் இணைய நுழைவுத்தேர்வு

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் குடிமைப் பணித் தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் இணைவதற்கான நுழைவுத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் 16 மையங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். அண்ணா மேலாண்மை மையத்தின் கீழ் இயங்கும் இந்த இலவச பயிற்சி நிறுவனத்தில் மொத்தமாக 200 முழுநேர இடங்களும் 100 பகுதி நேர இடங்களும் உள்ளன.

தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் ஒரு வார காலத்தில் இணைய தளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு பயின்று வரும் மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. எனவே, அதற்கு பிறகு இந்த மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments: