தொழில்சார் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கல்விக்கடன் வழங்குகிறது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழில்சார் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கல்விக்கடன் அதிக பட்சமாக 2 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
Auto CAD, Web Designing, Computer Software அல்லது Hardware, Office Management, Secretarial Course, 3D / 2D Animation, Graphics Design, Automobile Diploma உள்ளிட்டவற்றை படிக்கும் மாற்றுத்திறனாளிகள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். அல்லது 0129 - 2287 512 மற்றும் 0129 - 2287 513 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment