நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் உண்மையான தெய்வங்கள் தாய், தந்தை மற்றும் ஆசிரியர்கள் தான் என்று ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.
பெங்களூரு தெற்கு சுழல் சங்கம் மற்றும் கர்நாடக மக்கள் பாதுகாப்புப்படையினர் பெங்களூருவில் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த குருவணக்க நிகழ்ச்சியில் 108 ஆசிரியர்களை பாராட்டி கௌரவித்த பிறகு, அவர் பேசியது: நமது நாட்டில் ஏராளமான தெய்வங்கள் உள்ளன. சிவன், விஷ்ணு, விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்குவது போல, மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற பாரம்பரியத்தை பின்பற்றிய நாடு இந்தியா. தாயேபோற்றி, தந்தையே போற்றி, குருவே போற்றி என்று போற்றி வருவது நமது கலாசாரம். நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் தாய், தந்தை, ஆசிரியர்கள் தான் உண்மையான தெய்வங்கள்.
அண்மைகாலமாக ஆசிரியர்களின் போதனை தரம் குறைந்து வருகிறது. மாணவர்களிடையே நன்னெறிகளை போதிப்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தவேண்டும்.
இந்தியாவில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக உள்ளது. மாநிலத்தில் இருக்கும் தேசிய இந்திய சட்டப்பள்ளி உள்பட 24 தேசிய சட்டப் பள்ளிகள் உள்ளன. இந்தியாவில் இயங்கும் கல்லூரிகளில் படிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் குவிந்து வருகிறார்கள் என்றார் அவர். சுழல் சங்க ஆளுநர் நாகேந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment