ஒன்பது அஞ்சல் வழிக் கல்வித் திட்டங்களில் சேருவதற்கு கால்நடைப் பண்ணையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கால்நடை மற்றும் கோழிப் பண்ணை மேலாளர், கால்நடை உற்பத்திப் பொருள்களின் தொழில்நுட்பம், கால்நடைத் தீவன ஆலை மேலாண்மை, பசுந்தீவன உற்பத்தி, கறவைமாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, ஜப்பானியக் காடை வளர்ப்பு, வான்கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகிய 9 அஞ்சல்வழிக் கல்வித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு கல்வித் திட்டத்திற்கும் தேவையான பாடங்கள் தபால் மூலம் அனுப்பப்படும். மேலும் அந்த பாடங்களுக்கான கேள்விகளும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். கேள்விகளுக்கான விடைகளை கல்வி கற்போர் எழுதி அனுப்ப வேண்டும். பாடத்திட்டத்தின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் நேர்முகப் பயிற்சி வழங்கப்படும். நேர்முகப்பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிகளில் சேர விரும்புவோர் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பயிற்சிக் கட்டணத்திற்கான வரைவோலையுடன் இணைத்து தொலைநிலைக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை -51 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் விவரங்களுக்கு: தொலைபேசி: 044- 2555 4411, செல்போன்: 98841 36148 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Faculty
Dr. D. Thyagarajan, Director of Distance Education | dde@tanuvas.org.in |drthyagu2002@yahoo.com| Mobile: 9444810657
Dr. A. Manivannan, Associate Professor | a.manivannan@tanuvas.org.in | mani7priya@rediffmail.com| Mobile: 9443967560
Dr. B. Madukesvaran, Assistant Professor | madukesvaran@gmail.com | Mobile: 9444286404
Dr. A. Manivannan, Associate Professor | a.manivannan@tanuvas.org.in | mani7priya@rediffmail.com| Mobile: 9443967560
Dr. B. Madukesvaran, Assistant Professor | madukesvaran@gmail.com | Mobile: 9444286404
No comments:
Post a Comment