Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 11 November 2013

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தைக்கு யுஜிசி வழங்கும் உதவித்தொகை

வீட்டில் ஒரு பெண் குழந்தைக்கு முதுகலை பட்ட படிப்பு படிக்க கல்வி உதவித்தொகையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
ஒரு குடும்பத்தில் வேறு எந்தக் குழந்தைகளும் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தையாகவோ அல்லது இரட்டை பெண் குழந்தைகளாகவோ பிறந்து, 2013-14 கல்வியாண்டில் நேரடி முதுநிலை பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் சேர்ந்திருப்பவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதற்கு  www.ugc.ac.in/sgc  என்ற யுஜிசி இணைய தளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். யுஜிசி நியமித்துள்ள செயற்குழு இறுதி செய்யும் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

No comments: