Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 12 November 2013

மாணவர் சேர்க்கையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தங்களுக்கான கின்டர்கார்டன் சேர்க்கையில், 4 பிரிவுகளுக்கும் சேர்த்து, மொத்தம் 120 மாணவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு பள்ளி, சிறியதா, பெரியதா? என்பது இந்த கணக்கில் வராது.
இந்த புதிய விதி, வரும் 2014-15ம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த புதிய விதிமுறை CBSE மற்றும் ICSE பள்ளிகளை கட்டுப்படுத்தாது.
"அதேசமயம், சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 12 பிரிவுகள் வரை கொண்டுள்ளன. மேலும், மாணவர்களை கவனிக்க 250 ஆசிரியர்கள் வரை உள்ளதாகவும் அவை கூறுகின்றன. ஆனாலும், ஆபத்து என்று வரும்போது எதுவும் நிகழலாம். எனவே, எங்களால் எந்தவித ரிஸ்க்கும் எடுக்க முடியாது" என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த புதிய விதிமுறையின்படி, சிறப்பு அனுமதிபெற்ற பள்ளிகள், தங்களின் 5 பிரிவுகளில் 150 மாணவர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம். அதில், 25% சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கானது.
"தமிழகத்தில் மொத்தம் 5000க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 40% பள்ளிகள், தங்களின் கின்டர்கார்டன் சேர்க்கையில் 150 மாணவர்களுக்கு மேல் சேர்த்துக் கொள்கின்றன. மெட்ரிகுலேஷன் வாரியத்தின் புதிய கின்டர்கார்டன் மாணவர் சேர்க்கை விதிகள், பிற வாரியங்களின் விதிமுறைகளோடு ஒத்துவரவில்லை. இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு ஒவ்வாதது. எந்தப் பள்ளியுமே, மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கப் போவதில்லை. தங்களின் உள்கட்டமைப்பு எந்தளவு அனுமதிக்கிறதோ, அந்தளவு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும்" ஒரு தரப்பார் கூறுகின்றனர்.
"மேலும், இத்தகைய கட்டுப்பாடுகளால், தனியார் பள்ளிகளில் சேர முடியாத மாணவர்கள், அரசுப் பள்ளிகளை நாடிச் செல்ல வேண்டிய நிலையே ஏற்படும். இதனால், ஏற்கனவே, பிரபலமான பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்ப்பதற்கு சிரமப்படும் பெற்றோர்களின் நிலை இன்னும் மோசமாகும்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

No comments: