சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயம் வழங்கும் அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பில் சேர விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் வழியாக இந்தப் படிப்பு ஓராண்டு கால அளவில் இணைய தளம் வழியாக இரண்டு பருவங்களாக நடத்தப்படுகிறது.
ஒரு பருவத்திற்கு தலா 4 தாள்கள் வீதம் மொத்தம் 8 தாள்களுக்கு தேர்வு நடத்தப்படும். வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணி பெறுவதற்கு இந்த பட்டயம் பயன்படும்.
இந்த பட்டயப்படிப்பில் சேர குறைந்தது 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லை. நேரடிச் சிறப்பு வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
இந்த படிப்பில் சேர, www.srmuniv.ac.in/tamilperayam என்ற இணைய தளத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
பெயர்களை பதிவு செய்ய நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 தாள்களிலும், தேர்ச்சி பெற்ற பின்னரே பட்டயச் சான்றிதழ் வழங்கப்படும்.
No comments:
Post a Comment