மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று ‘ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்’ தலைவர் ஏ.பட்டாச்சார்யா தெரிவித்தார்.
சார்நிலை பணியாளர்கள்
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்குத் தேவைப்படும் சார்நிலை பணியாளர்கள்; அதாவது, குரூப்-பி, குரூப்-சி ஊழியர்கள் ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதற்காக அவ்வப்போது அகில இந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. காலியிடங்கள் மண்டல அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் இந்தியாவின் எந்த பகுதியில் இருப்பவர்களும் இந்த தேர்வுகளை எழுதலாம்.
தற்போது, கீழ்நிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர், அக்க வுண்டன்ட், ஆடிட்டர், வருமான வரி ஆய்வாளர், கஸ்டம்ஸ்-சென்ட்ரல் எக்சைஸ் அதிகாரி, கடத்தல் தடுப்பு அதிகாரி, அமலாக்கப் பிரிவு அதிகாரி உள்பட 30 விதமான பதவிகளுக்கு ஸ்டாப் செலக்சன் கமிஷன் நடத்தும் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், தேர்வைப் பொறுத்தவரையில், ஒ.எம்.ஆர். விடைத்தாளில் மார்க்கிங் செய்து பதில் அளிக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வுமுறை
இவ்வாறு தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு கணினி மூலம் மதிப்பீடு செய்யப்படும். இதனால், விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் கணக்கிட்டு தேர்வு முடிவை வெளியிடுவதற்கு பல மாதங்கள் ஆகிவிடும்.
இந்த நிலையில், தேர்வு முடிவு களை வெகு விரைவாக வெளியிடும் வகையில் ஆன்லைன் தேர்வு முறையை அறிமுகப்படுத்த ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.) திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.எஸ்.சி. தலைவர் ஏ.பட்டாச்சார்யா “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:
விரைவாக தேர்வு முடிவு
இப்போது போட்டித் தேர்வு களுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார்கள். மத்திய அரசின் காலி பணியிடங்களையும் தற்போது அனைத்து அமைச்ச கங்கள் மற்றும் துறைகளிடமிருந்து ஆன்லைனில் பெறும் முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி னோம்.
அந்த வரிசையில், தேர்வு முடிவுகளை விரைவாக வெளி யிடும் வண்ணம் ஆன்லைன் தேர்வு முறையை கொண்டுவர திட்ட மிட்டுள்ளோம். முதல்கட்டமாக, குறைந்த காலியிடங்கள் உள்ள பணிகளுக்கான தேர்வில் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படும். தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமும் (யு.பி.எஸ்.சி.) இது போன்ற முறையைத்தான் பின்பற்றி வருகிறது. ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு முடிவுகளை மிக விரைவாக வெளியிட்டுவிட முடியும் என்றார்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் டி.என்.பி.எஸ்.சி.யும் குறைந்த காலி யிடங்கள் கொண்ட பணிகளுக்கு ஆன்லைனில்தான் தேர்வு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment