தமிழகத்தில், 570 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில், இந்த ஆண்டு, 79,303 இடங்கள் மாணவர்கள் பற்றாக்குறையால் நிரப்பபடவில்லை. 10 சதவீத இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே, வேலை பெறுகின்றனர்.
காளான்கள் போல இன்ஜினியரிங் கல்லூரிகள் முளைத்ததன் விளைவு தரமான ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்க முடியவில்லை. பல இன்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரிகள், எம்.பி.ஏ., படிப்பை துவங்கி, போதிய மாணவர்கள் இல்லாமல் மூடி விட்டன. எம்.பி.ஏ., படித்தவர்களுக்கு வேலையும் குறைந்துவிட்டது.
இதே நிலைதான், தெருவிற்கு தெரு முளைத்த, பி.எட்., கல்லூரிகளுக்கும்; இப்படி வேலை வாய்ப்பிற்கான படிப்புகளை மலிவாக்குவதால், படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது இல்லை என்பதை, அரசு உணர வேண்டும். இன்ஜினியரிங் கல்லூரிகள், மரைன் இன்ஜினியரிங் படிப்புகளை துவங்க அனுமதித்தால், இந்த நிலைதான் ஏற்படும்.
No comments:
Post a Comment