Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 6 August 2013

ஆசிரியர் தகுதி தேர்வு 5.50 லட்சம் பேருக்கு இன்று (05.08.2013) ஹால் டிக்கெட் வெளியீடு | TET - 5.5Lakh Hall Ticket will be published Today

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ல் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு முதல் முறையாக தமிழகத்தில் நடந்தது. அந்த தேர்வில் 6 லட்சம் பேர் எழுதினர். ஆனால் பணியிடங்களைவிட மிகக்குறைந்த அளவிலே பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி ஏற்பட்டன.


இந்த ஆண்டுக்கான காலி இடங்களையும் சேர்த்து 17000 பணியிடங்கள் இப்போது நிரப்ப வேண்டி நிலை உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக 12 லட்சம் விண்ணப்பங்களை டிஆர்பி அச்சிட்டு கடந்த மே மாதம் 31ம் தேதி முதல் வினியோகம் செய்தது. சுமார் 6 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரிகள் டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் நேற்று வரை தாள் ஒன்றுக்கு 6538, தாள் இரண்டுக்கு 17,038 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

விண்ணப்பம் போட்டவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை தவறாக பூர்த்தி செய்துள்ளதாக டிஆர்பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணிகள் தற்போது நடக்கிறது. இன்று மாலை இணைய தளத்தில் அவை வெளியிடப்பட உள்ளன. மேலும், டிஇடி தேர்வுக்கான தேர்வு மையங்கள், மாவட்ட வாரியாக தேர்வு எழுத உள்ளவர்கள் பட்டியல்கள் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. இதையடுத்து இன்று மாலை டிஇடி தேர்வுக்கான முதற்கட்ட பணிகள் முடியும்.

No comments: