தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவு செய்யும்
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த
வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதிவு செய்யும்
விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாணையத்தின் தேர்வுத் தேதிகள் உள்ளிட்ட தகவல்கள்
இ-மெயில் மூலமோ எஸ்.எம்.எஸ். மூலமோ வந்து சேரும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக ஆன்லைனில் நிரந்தரப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தப்பதிவு எந்த ஒரு பணிக்கான தேர்வுக்குரிய விண்ணப்பமாகக் கருதப்படமாட்டாது. தேர்வாணையத்தால் அறிவிக்கப்படும் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையவழியைப் பயன்படுத்த இந்தப் பதிவு உதவியாக இருக்கும். அத்துடன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் தேர்வு முடிவுகள், காலிப்பணியிடங்கள் விவரம், தேர்வு தேதிகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே எஸ்.எம்.எஸ். வாயிலாகவோ, இ-மெயில் மூலமோ அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு தனியான அடையாள எண் (லாக் இன்) கொடுக்கப்படும். அதனுடன் தனியாக ரகசியக் குறியீடு எண்ணும் (பாஸ்வேர்டு) வழங்கப்படும். இதில் விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்கள் அதாவது, பெயர், விலாசம், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, இ-மெயில் முகவரி தொலைபேசி எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் இந்த பிரத்யேக அடையாள எண்ணைப் பயன்படுத்தி இணையவழி தகவல்களை ஐந்து ஆண்டுகளுக்கு பெறலாம். இணைய தளத்தில் பதிவு செய்வதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை தமிழகம் முழுவதிலும் உள்ள இந்தியன் வங்கியின் கிளைகளிலும் அல்லது அஞ்சல் நிலையங்களிலும், கடன் அட்டைகள் மூலமாகவும் கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதியை கிராமத்தில் உள்ளவர்களும் பெறும் வகையில் 500க்கும் மேற்பட்ட உதவி மையங்களை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்திருப்பவர்கள் அடுத்து வர இருக்கும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். இனி வரும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பங்களை, ஆன்லைனில் அனுப்புவதற்கான வசதிகளைச் செய்வதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார் தேர்வாணையத் தலைவர் ஆர்.நட்ராஜ். அந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் போது ஹால் டிக்கெட்டுகளையும் இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் நேரடியாக டவுன்லோடு செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்படும். |
மகிழ் முற்றம் கையேடு
11 minutes ago
No comments:
Post a Comment