Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 14 July 2015

பள்ளியிலேயே நாளை முதல் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவையும் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
ஆகவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் (இருப்பின்), குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை, மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று கொண்டுவர வேண்டும்.
மேலும், 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். 
சென்னை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 27-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது. 
இதன்படி, பதிவுப் பணி நடைபெறும் 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படும். 
மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments: