Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 4 July 2015

பேராசிரியர் தகுதி, கட்டமைப்பு விவரங்களை கல்லூரி இணையதளத்தில் வெளியிட வேண்டும்: யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி குறித்த அனைத்துத் தகவல்களையும் அந்தந்தக் கல்லூரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
மாணவர்கள், பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு தகவல்களை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அவற்றின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
அதாவது, மாணவர் சேர்க்கை நடைமுறைகள், பல்வேறு படிப்புகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை, அனைத்து பேராசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்கள், தங்கும் விடுதி, பேருந்து வசதிகள் குறித்த விவரங்கள், ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்கள், படித்து முடித்த மாணவர்களின் வேலைவாய்ப்பு விவரம் ஆகியவற்றை இணையதளத்தில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் வெளியிட 
வேண்டும்.
தவிர, கல்லூரி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட மாணவர்களுக்கான கட்டண விவரம், மாணவர் குறைதீர்ப்பு அமைப்பு விவரம், கல்லூரி கல்வி உதவித்தொகை விவரம், கல்லூரி அங்கீகாரம் உள்ளிட்ட விவரங்களையும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அவற்றின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாள்களுக்குள் பல்கலைக்கழகங்கள் யுஜிசி-க்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: