Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 11 July 2015

கற்றலில் குறைபாடு குறித்த முதுநிலைப் பட்டயப் படிப்பு: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

கற்றலில் குறைபாடு குறித்த ஓராண்டு முதுநிலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸஸ்' மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்தி:-
கற்றலில் குறைபாடு குறித்த முதுநிலை பட்டயப்படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்; படிப்பில் சேரும்போது 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இந்த முதுநிலை பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான கல்வி மையங்களில் சிறப்பு ஆசிரியர்களாகவும், மருத்துவமனைகளிலும் பணியாற்றலாம். மேலும், இதன் மூலம் சிறப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கும் சுயதொழில் வாய்ப்பையும் பெறலாம். இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31 ஆகும். வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும். கற்றலில் குறைபாடு குறித்த ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் "கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸஸ்' மையம், எண் 1, முதல் தளம், டாக்டர் தட்சிணாமூர்த்தி நகர் 5-ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-600034 என்ற முகவரியிலும், 044-28212828 என்ற தொலைபேசி எண், 9843974984 என்ற செல்லிடப்பேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இது குறித்த மேலும் தகவல் பெற ஸ்ரீஹழ்ங்ண்க்ஷள்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: