தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை அறிமுக வகுப்புகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தப் பிரிவின் கீழ் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் பள்ளி வாரியாக www.tnmatricschools.com என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
காலியிடங்கள் உள்ள பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பங்களைப் பெற்று மாணவர்களைச் சேர்க்கலாம் என கல்வி உரிமைச் சட்டத்தின் மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருமான ஆர்.பிச்சை அறிவித்துள்ளார்.
இதுவரை 65 ஆயிரம் மாணவர்கள்: இந்தச் சட்டத்தின கீழ் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு 65 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment