Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 14 July 2015

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத் திட்டம்?

பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்தத் துணைக் குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. 
இந்தப் பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியது.
அதன் பிறகு, பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்கள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், பல மாதங்களாக இந்தப் பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதற்கான அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், அடுத்தக் கல்வியாண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமலாக வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
புதிய பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

No comments: