Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 16 June 2015

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு எதிரான வழக்கு: பள்ளிக்கல்வித் துறை பதில் மனு தாக்கல்

பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த 30ம் தேதி தேர்வு நடந்தது. இதில் 8 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் இந்த தேர்வை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு இன்று பதில் மனு தாக்கல் செய்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ள மாட்டோம் நேர்முகத் தேர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் கொள்வேம் என கூறினார்.
இதற்கு நீதிபதி எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல் எப்படி நேர்முகத் தேர்வுக்கு அழைப்பீர்கள் என கேட்டதற்கு அரசிடம் கேட்டு பதில் அளிப்பதாக கண்ணப்பன்  தெரிவித்தார்.

No comments: