தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது. முதல்நாளில், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினரைச் சேர்ப்பதற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய அரங்கில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது.
மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டில் சிறந்து விளங்குவோர் ஆகிய மூன்று சிறப்புப் பிரிவினருக்கு உரிய 76 எம்.பி.பி.எஸ், ஒரு பி.டி.எஸ். இடங்கள் இன்று நிரப்பப்படுகிறது.
மாற்றுதிறனாளிகள்:
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்கள் (68 இடங்கள்) ஒதுக்கப்படும். இந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த 82 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஓமந்தூரார் கலந்தாய்வு அரங்கிலேயே மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்தி 68 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் தகுதி பெற்று விருப்பப்படும் நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 3 பி.டி.எஸ். இடங்களையும் தேர்வு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகின்றது.
No comments:
Post a Comment