திருநெல்வேலியில், பள்ளி மாணவிகள் இரண்டு பேரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில், இரண்டு மாணவிகளுக்கும் ஏன் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கூடாது என்று கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையத் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில், மாணவிகளை பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் அன்றைய தினம் பணிக்கு வராததால், அதே பள்ளியில் படிக்கும், அவரது மகளை, கழிவறையை சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் நபருக்கு வாரத்துக்கு ரூ.20 ஊதியமாக வழங்குவது குறித்து குறிப்பிட்ட மனித உரிமைகள் ஆணையம், இதுபோன்ற வேலைகளை செய்யும் நபர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வகை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment