Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 17 February 2015

TNFUSRC: தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்து தமிழ்நாடு வனத்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழக அரசின் வனத்துறை 
மற்றும் வனக் கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள 200 வனவர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது. முதல் தாள் (பொது அறிவு) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையும், 2-ம் தாள் (பொது அறிவியல்) பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்க 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் www.forests.tn.nic.in மற்றும் http://forest.examsonline.co.in ஆகிய வனத்துறை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Login For Admit Card
 
Application No. 
Date of Birth 
Security Key   
Enter Security Key 

No comments: