Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 15 February 2015

வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பக் கோரி வனக்கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்

வனச்சரகர் பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கோவை மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில் மாணவர்கள் 20வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வனவியல் புத்தகங்களை கைகளில் ஏந்தியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வனச்சரகர் பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி முதல் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 20வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவ, மாணவியர், வனத்தைப் பற்றி முழு அறிவு பெற்ற தங்களுக்கு வனத்துறை பணியிடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக புகார் கூறினர். கோரிக்கைகளை ஏற்காவிட்டால், காலவரையரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments: