Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 2 January 2015

பி.எட் & எம்.எட் படிப்பு: காலம் 2 வருடங்கள்

நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்று கூறுவதும் உண்டு.
கல்வியில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. தமிழக அரசும் கல்விக்காக எந்த செலவையும் ஏற்கத் தயார் என்ற நிலையில் உள்ளது. இதுவரையில் ஆசிரியர் ஆகும் முன்பாக, பட்டப்படிப்பு முடித்த மாணவ-மாணவிகள் ஆசிரியர் பயிற்சி பெறுவார்கள். தற்போதும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பி.எட் படிப்பு மற்றும் எம்.எட் படிப்பு காலம் தலா ஒரு வருடம் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். எனவே பயிற்சி காலத்தை 2 வருடமாக்க வேண்டும் என்று தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) முடிவு வெளியிட்டுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பி.எட் மற்றும் எம்.எட் படிப்பு 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் கூறும்போது, மாணவர்களின் கல்வித்திறனை மேலும் தமிழக அரசின் அனுமதி பெறுவதற்காக ஏற்கனவே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு சிண்டிகேட் அனுமதி மற்றும் தமிழக அரசின் அனுமதிக்கு வைக்கபட உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

No comments: