ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, உதவித்தொகைகளுக்கான அடிப்படை நிதியளவை, பல்கலைக்கழக மானியக்குழு அதிகரித்துள்ளது.
இதன்படி, JRF எனப்படும் Junior Research Fellowship திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை, ரூ.16 ஆயிரத்திலிருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், SRF எனப்படும் Senior Research Fellowship என்ற திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையின் அளவு ரூ.18 ஆயிரத்திலிருந்து, ரூ.28 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ராஜ்யசாபாவில் பேசிய மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி, "அடிப்படை அறிவியல் துறைகளில், JRF மற்றும் SRF ஆகியவற்றில் உயர்த்தப்பட்டுள்ள தொகையானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு நிகரானதாக இருக்கும்" என்றார்.
மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில், உதவித்தொகைகளின் உயர்வு, 55% என்பதாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியல் துறையில் ஆய்வு மேற்கொள்வதற்கான சுவாமி விவேகானந்தா ஒற்றை பெண் குழந்தை பெல்லோஷிப் திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை, முதல் 2 ஆண்டுகளுக்கு, மாதம் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 என்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15,500 என்பதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், GATE தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையும் ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment