சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் டிச.21-ம் தேதி தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது.
காரைக்குடியில், சிக்ரியால் அமைக்கப்பட்டுள்ள 11 இடங்களில் தேர்வு நடக்கிறது. இதில் ஆறாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
தேர்வு எழுத பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், புகைப்படத்துடன் கூடிய நுழைவு சான்றினைwww.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவு சான்று தபாலில் அனுப்பப்படமாட்டாது. பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவு சீட்டில் போட்டோ இல்லையெனில், இரண்டு பாஸ்போர்ட் சைஸ்போட்டோ, போட்டோ அடையாள சான்று, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை இவைகளில் ஏதேனும் ஒன்றை நுழைவு சீட்டோடு கொண்டு வர வேண்டும்.
அத்துடன் தேர்வு எழுதும் மாணவர்கள் கருப்பு மை பால்பாயிண்ட் பேனா ஒன்று கட்டாயம் எடுத்து வர வேண்டும். டிச.21 அன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை, உயிர் அறிவியல், புவி, வானவியல், கடல் மற்றும் கோளவியல் அறிவியல், கணித அறிவியல் தேர்வும், மதியம் 2 மணிமுதல் 5 மணி வரை வேதி அறிவியல், இயற்பியல் அறிவியல், இன்ஜி., அறிவியல் பாடத்திற்கான தேர்வும் நடைபெறும்.
நகல் நுழைவு சீட்டு வழங்கப்படமாட்டாது. மாணவர்கள் 30 நிமிடம் முன்னதாக வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் மோகன், கருணாநிதி ஆகியோரை 04565 241 261, 94421 26765, 94436 09776 என்ற எண்ணிலோ, mohan40159 @gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment