சட்டப் படிப்புக்கான கிளாட் நுழைவுத்தேர்வு மே 10, 2015 முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
அனைத்திந்திய சட்டப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு, காமன் லா அட்மிஷன் (கிளாட் 2015) மே 10ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கிளாட் தேர்வு குழு முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் கிளாட் நுழைவுத்தேர்வை லக்னோவில் உள்ள டாக்டர். ராம் மனோகர் லோஹியா நேஷ்னல் லா பல்கலைக்கழகம் நடத்தி வருகின்றது. அந்த வகையில் இந்தாண்டு நுழைவுத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிளாட் தேர்வு எழுதும் மையங்கள் கடந்த ஆண்டை காட்டிலும், இந்தாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கிளாட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கூடுதல் விவரங்கள் அறிய www.clat.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment