ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர் TET 2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது. ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்று இருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டுமனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும். புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும்தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே உண்மை.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.01.2025
5 hours ago
No comments:
Post a Comment