தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள் ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபிதா வெளி யிட்ட உத்தரவு:
தமிழகத்தில் 1197 அரசு மேல்நிலைப் பள்ளி களில் 1880 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடந்த 1999&2000மாவது ஆண்டில்தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.இவர்களில் பலர் பி.எட்., கல்வித் தகுதி இல்லாத போ திலும் இவர்கள் பணி செய்த காலத்தைகருத் தில் கொண்டு மனிதாபி மான அடிப்படையில் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பின்னர் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்த சிறப்பு போட்டித் தேர்விற்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் தேர்ச்சி சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 50 சதவீதம் மதிப்பெண்கள் பெறாத கணினி ஆசிரியர்களுக்கு 2வது முறையாக கடந்த 24.1.2010 அன்று சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேர்விலும் தேர்ச்சி பெறாத 652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த பணி நீக்கம் தொடர்பாக வும், பிஎட் படித்த கணினி ஆசிரியர்கள் சார்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள 652 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.இந்த பணியிடங்களை பி.எட் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இந்த பணிக்கு தேவையான கல்வித் தகுதி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அதே நேரத்தில் ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் பி.எட்., கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் அவர்களுக்கு எந்தவித முன்னுரிமையும் கிடையாது. வருங்காலங்களில் உருவாகும் கணினிஆசிரியர் பணி காலியிடங்களை தமிழக அரசின் கொள்கை அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது. மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது. மேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment