Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 2 September 2014

கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை சமூக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை திட்டத்தின் மூலம் கல்வி உதவி தொகை பெற சிறுபான்மை சமூக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கல்வியில் சிறந்து விளங்குவதோடு, வசதியில்லாமல் கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு மௌலானா ஆசாத் தேசிய உதவித் தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் சார்பில் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்தோர் நிகழாண்டில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகளுக்கு மத்திய அரசின் மௌலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12000 கல்வி உதவித் தொகை வழஹ்கப்படுகிறது. இத்தொகை இரண்டு தவணைகளில்(11-ம் வகுப்பிற்கு ரூ.6 ஆயிரமும், 12-ம் வகுப்புக்கு ரூ.6 ஆயிரமும்) வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை பெற கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருள்கள் மற்றும் உண்டு உறையுள் கட்டணங்களுக்காக மட்டும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1343 சிறுபான்மையின மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித் தொகை பெறுவதற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியமாகும். 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும. அதேபோல், நிகழாண்டில் 2013-14 ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கிகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் முறையாக சேர்ந்து 11-ம் வகுப்பு படித்து வருபவராக இருக்க வேண்டும். அதற்கான சேர்க்கை அனுமதிச் சீட்டு கடித நகல் இணைத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் வருமான சான்றிதழ், ரூ.20 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் ஆகியவைகளை விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும். மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தங்கள் பயிலும் கல்வி நிலையத்தில் சமர்பிக்க வேண்டும். இதற்கான  விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விவரங்களை இணைய தளத்தில் இருந்து படியிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர் 11-ம் வகுப்பு சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து உரிய சான்றுகளுடன் கையொப்பம் செய்து குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் அசலாக The Secretary, Maulana Azad Education Foundation, (Ministry of Minority Affairs, Goverment of India) Cheimsford road, New Delhi-110055 என்கிற முகவரிக்கு வருகிற 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் தவறாமல் அனுப்ப வேண்டும்.
அதேபோல், 2014-15 ஆம் ஆண்டில் ஒப்பளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விவரங்கள் மற்றும் விண்ணப்படிவங்கள், http:maef.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விவரங்களை தொடர்பு உடைய கல்வி நிலையங்கள் மேற்படி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இத்திட்டத்தில் கல்வி உதவித் தொகை பெற நிகழாண்டில் உரிய நாள்களுக்குள் சிறுபான்மையின மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments: