தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற 140 முதுகலை ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில் வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய மூன்று பாடங்களை தமிழ் வழியில் படித்து போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற 140 பேர் ஆறு மாதங்களுக்கு மேலாக பணி நியமனமின்றி தவித்து வந்தனர். இவர்கள் நேற்று கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர். 'ஒரு வாரத்திற்குள் 140 பேரும் பணி நியமனம் செய்யப்படுவர்' என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில் 140 பேருக்கும் பணி நியமன உத்தரவுகள் அஞ்சல் மூலம் அனுப்பும் பணி நேற்றே துவங்கியதாக துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள் அனைவருக்கும் பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும் என கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
பள்ளி காலை வழிபட்டு செயல்படுகள் - 03.03.2025
2 hours ago
No comments:
Post a Comment