பி.எட். ஆசிரியர் கல்வி இளநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்தக் கலந்தாய்வு வரும் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டுகளில் சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்த பி.எட். சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டில் மதுரை, கோவை மற்றும் சேலத்திலும் நடைபெறுகிறது. மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு முதன்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 , 162 இடங்களுக்கு தற்போது கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு விவரங்கள், அழைப்புக்கடிதம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் இணையதளத்தில் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் பி.எட். இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்காக 10,450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment