வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி, விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத் திறனாளிகளில் இருவர் செவ்வாய்க்கிழமை மயக்கமடைந்தனர்.
பி.எட், டி.டி.எட். பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண்கள் குறைத்து வேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்க வேண்டும், ஆசிரியர் பட்டயப் படிப்பு பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும், பி.எட், கணினி பயின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை மாலை 3 மணி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்தனர். 2 ஆம் நாளாக செவ்வாய்க்கிழமையன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் மாலை 4 மணி அளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒலக்கூரைச் சேர்ந்த எம்.பில். பட்டதாரி ஜெயலட்சுமி (27), திருக்கோவிலூரைச் சேர்ந்த டி.டி.எட். பட்டதாரியான அண்ணாமலை ஆகியோர் மயக்கமடைந்தார். இவர்களை போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளே 108 ஆம்புலன்ûஸ வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று வட்டாட்சியரிடம் தெரிவித்துவிட்டோம். இருவர் மயக்கமடைந்தபோது கூட யாரும் வரவில்லை. நாங்களே 108 ஆம்புலன்ûஸ அழைத்து இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.
No comments:
Post a Comment