Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 12 August 2014

TNTEU: பி.எட். படிப்பு: விரைவில் 2-வது கட்ட கவுன்சலிங்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் காலியாகவுள்ள 505 இடங்களை நிரப்ப அடுத்த வாரம் 2-வது கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2,155 பி.எட் இடங்களை நிரப்ப கடந்த 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.
சிறப்பு ஒதுக்கீடு-3, பொதுப் பிரிவு-48, பிசி - 137, பிசி (முஸ்லிம்) - 49, எம்பிசி - 127, எஸ்சி-85, எஸ்சி (அருந்ததியர்) - 46, எஸ்டி-10. கலந்தாய்வுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி 301 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். பொதுவாக கலந்தாய்வு முடிந்த பிறகு காலியிடங்கள் இருந்தால் அவை 2-வது கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது வழக்கம். இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:
பி.எட் படிப்புக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது 505 காலியிடங்கள் உள்ளன. இவற்றில் 3 இடங்கள் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கானது (பார்வையில்லாதவர்கள்). கலந்தாய்வு மூலம் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெற்று குறிப்பிட்ட கல்லூரியில் மாணவர் சேர்ந்திருப்பது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் அரசு கல்வியியல் முதல்வர்களிடம் 17-ம் தேதி பட்டியல் கேட்கப்படும். இதைத் தொடர்ந்து, காலியாக உள்ள இடங்களை நிரப்ப ஆகஸ்ட் 18 அல்லது 19-ம் தேதி 2-வது கட்ட கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments: