TAMIL NADU RURAL STUDENT TALENT SEARCH EXAM - 2014 - APPLICATION
கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மண்டல தேர்வுத்துறை துணை இயக்குனரின் செயலர் ந.மாதவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான 2014-ஆம் ஆண்டு திறனாய்வுத் தேர்வுக்கு வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்கு விண்ணப்பிக்க பின்வரும் தகுதிகளை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். கிராமப்புற பகுதியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி அடைந்து, தற்போது 9-ஆம் வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும்.
திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் மாணவரின் பெற்றோர் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருப்பதற்கான வருவாய்த்துறை சான்று அளிக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.5, சேவைக்கட்டணம் ரூ.5 என மொத்தம் ரூ.10-யை, ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சேர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் உரிய முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவர்கள், 50 மாணவிகள்) 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் காலத்துக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயில்வோரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.
No comments:
Post a Comment