Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 14 August 2014

SSLC துணைத்தேர்வுக்கு ஆக.18-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுக்கு ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்துக்கு நேரில் சென்று வருகிற 18-ந் தேதி முதல் 26-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாகஅமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களின் விவரங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும்அரசுத் தேர்வு கள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.
முந்தைய பருவங்களில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், அவர்கள் விருப் பப்பட்ட பாடங்களில் தற்போது தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெற்று, கருத்தியல் (தியரி) தேர்வில் தேர்ச்சி பெறாத வர்கள் மட்டுமே கருத்தியல் தேர் வெழுத விண்ணப்பிக்க தகுதியானவர். செய் முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக் களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுத தகுதியுடையவராவர்.
கடந்த 2013-14 -ம் கல்வியாண்டில் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகையுடன் விண்ணப்பித்து பயிற்சி பெற்றவர்கள் சிறப்பு நிகழ்வாக அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதலாம். இவ்வகைத் தேர்வர்கள் 1.10.2014 அன்று பதினான்கரை வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்திய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வி யடைந்தவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வித்திட்டத்தின்கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறைப் பயிற்சிப் பெற்றவர்கள் செய்முறைத் தேர்வு உட்பட அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். எக்காரணம் கொண்டும் அறிவியல் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வுக் கட்டணம் ரூ. 125 உடன் கூடுதலாக பதிவுக் கட்டணம் ரூ.50- ஐ சேர்த்து மொத்தம் ரூ. 175-ஐ பணமாக ஒருங்கிணைப்பு மையத்தில் செலுத்த வேண்டும். பார்வையிழந்தோர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்-லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுக் கூட அனுமதிச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
துணைத்தேர்வுகள் செப். 25-ல் ஆரம்பம்
பிளஸ்-2 துணைத்தேர்வுகள் செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 9-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். இதேபோல், எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுகள் செப்டம்பர் 25-ம் தேதி ஆரம்பித்து அக்டோபர் 4-ம் தேதி வரை தினமும் காலை 9.15 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.

No comments: