Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 14 August 2014

செப்.25 முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகள்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகள் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் இந்த ஆண்டு 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 20 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வுகளில் 10 சதவீதம் பேர் (2 லட்சம்) தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக நடைபெற்ற சிறப்பு துணைத் தேர்வுகளிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காகவும், நேரடியாக தனித்தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்காகவும் தனித்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை
(தேர்வு நேரம் காலை 10 மணி முதல் 1.15 வரை)
செப்டம்பர் 25    வியாழக்கிழமை  மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 26    வெள்ளிக்கிழமை மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27    சனிக்கிழமை     ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 29    திங்கள்கிழமை    ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 30    செவ்வாய்க்கிழமை இயற்பியல், பொருளாதாரம்
அக்டோபர் 1    புதன்கிழமை   கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டட்டிக்ஸ்
அக்டோபர் 4    சனிக்கிழமை   வணிகவியல், மனையியல், புவியியல்
அக்டோபர் 6    திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்
அக்டோபர் 7    செவ்வாய்க்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
அக்டோபர் 8    புதன்கிழமை    தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்)
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு கால அட்டவணை
(தேர்வு நேரம் காலை 9.15 முதல் நண்பகல் 12 மணி வரை)
செப்டம்பர் 25    வியாழக்கிழமை    மொழிப்பாடம் முதல் தாள்
செப்டம்பர் 26    வெள்ளிக்கிழமை    மொழிப்பாடம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 27    சனிக்கிழமை    ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 29    திங்கள்கிழமை    ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 30    செவ்வாய்க்கிழமை    கணிதம்
அக்டோபர் 1    புதன்கிழமை    அறிவியல்
அக்டோபர் 4     சனிக்கிழமை    சமூக அறிவியல்

No comments: