Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 4 August 2014

மத்திய பட்ஜெட் 2014 : கல்விக்கான புதிய திட்டங்கள்! புதிய அறிவிப்புகள்!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்த மத்திய நிதி நிலை அறிக்கையில் கல்விக்கான அறிவிப்புகளில் முக்கிய அம்சங்கள்...
  • தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போன்று ஆந்திரம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா, உத்தரப்பிரதேசத்தில் பூர்வாஞ்சல் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
  • ஏற்கெனவே 58 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 12 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • இமாச்சலப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புதிதாக ஐஐஎம் என்று அழைக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
  •  ஜம்மு, சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப்பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னலாஜி (ஐஐடி) கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
  • கலைப்புலப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்தியப் பிரதேசத்தில் ஜெய பிரகாஷ் நாராயண் நேஷனல் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் தொடங்கப்படும்.
  • புனேயில் உள்ள ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆகிய திரைப்படக் கல்வி நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • அனிமேஷன், கேமிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஆகியவற்றுக்காக தேசிய மையம் அமைக்கப்படும்.
  • வேளாண் தொழில்நுட்பம், வேளாண் வர்த்தக கட்டமைப்புகள் குறித்த ஆராய்ச்சிக்காகஅசாமிலும் ஜார்க்கண்டிலும் புதிதாக அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டுகள் அமைக்கப்படும்.
  • ஆந்திரப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் புதிதாக இரண்டு வேளாண் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும். அத்துடன் தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.
  • ஆந்திர மாநிலம் ஹிந்துப்பூரில் நேஷனல் அகாதெமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்ஸ்சைஸ் தொடங்கப்படும்.
  • சென்னை மருத்துவக் கல்லூரியிலும், தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும்  நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏஜிங் தொடங்கப்படும்.
  • உயர்கல்வி படிப்பதற்காக மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், படிக்க வைப்போம்’ என்ற திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் நலச் சேவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் மாற்றியமைக்கப்படும்.
  • கைத்தறி, கைவினைத் தொழில்களைப் பாதுகாத்து அதனைப் புனரமைக்கும் வகையில் தில்லியில் ஹஸ்த் கலா அகாதெமி அமைக்கப்படும்.
  • விளையாட்டுத் துறையை மேம்படுத்தும்வகையில் தேசிய விளையாட்டு அகாதெமிகள் அமைக்கப்படும்.
  • மணிப்பூர் மாநிலத்தில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதற்கான தொடக்க கட்ட நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிப்பதற்காக மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.
  • பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில்  பாடப் புத்தகங்களை அச்சடிக்க 15 பிரெய்லி அச்சகங்கள் புதிதாக ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே இருக்கும் 10 அச்சகங்களை நவீனப்படுத்த மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக பிரெய்லி குறியீடுகளுடன் கூடிய பிரத்யேக ரூபாய் நோட்டுகளையும் அரசு அச்சிடவுள்ளது.
  • மதரஸாக்களை நவீனமயமாக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும்.
  • பண்டிட் மதன் மோகன் மாளவியா புதிய ஆசிரியர் பயிற்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும். அதற்கு தொடக்க கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் ஆசிரியர் கல்வி நிலையங்களில் உள்ள 20 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் அடைவார்கள்
  • ரூ.30 கோடி செலவில் பள்ளி மதிப்பீட்டுத் திட்டம் என்ற புதிய முயற்சி தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளின் தரத்தை பெற்றோர்கள் புரிந்து கொண்டு, தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கான பள்ளிகளைத் தீர்மானிக்க இத்திட்டம் உதவியாக இருக்கும்.
  • ஆன்லைன் படிப்புகளையும் இணைய வகுப்பறைகளையும் உருவாக்குவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments: