Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 16 July 2014

TNTEU: பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது.

இந்தியாவில் கல்வித்தரத்தை மேம்படுத்த முதல் கட்டமாக ஆசிரியர்களுக்கு நல்ல திறமை இருக்கவேண்டும். இதையொட்டி தேசிய ஆசிரியர் கல்விக்குழு பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் தலா 2 வருடமாக உயர்த்த கொள்கை அளவில் முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து இந்தியா முழுவதும் இருந்து அனைத்து ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் கருத்துக்களை கடிதமாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளன. தேசிய ஆசிரியர் கல்விக்குழு பரிசீலித்து முடிவை எடுக்க உள்ளது. பெரும்பாலும் பி.எட். படிப்பையும், எம்.எட். படிப்பையும் 2 ஆண்டுகளாக உயர்த்துகிறது.
இந்த 2 ஆண்டு படிப்பு அடுத்த கல்வி (2015-2016) ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படுகிறது. பி.எட்., எம்.எட். படிப்புகள் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டால் ஆசிரியர்களும் நன்றாக பயிற்சி பெற்று மாணவர்களுக்கு இப்போது உள்ளதை விட மேலும் சிறப்பாக கல்வி கற்பிக்க முடியும்.

No comments: