Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 16 July 2014

நிதி முறைகேடு: கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்ட நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை

புதுக்கோட்டையிலுள்ள் கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடன் வழங்கியதில் ரூ. 9 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப்பின்  சங்க நிர்வாகத்தை கலைப்பதாக கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பிறப்பித்த  உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை தடை விதித்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையப்பகுதியில் தமிழ்நாடு அரசு கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் இயங்கி வருகிறது. இதில் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் உள்பட 800 -க்கும் மேல்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  சுமார் ரூ. 200 கோடி வரை வரவு செலவு நடைபெற்று வரும் இச்சசங்கத்துக்கு  கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 30 லட்சம் வரை லாபம் கிடைத்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தேர்தல் மூலம் இச்சங்கத்துக்கு தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர்கள் என 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக எம். மாரிமுத்து பொறுப்பேற்றார்.  இந்நிலையில், சங்கத்தின் முறையான அனுமதியின்றி உறுப்பினர்களாக உள்ள சில ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அவர்களது பெயரைப் பயன்படுத்தி சுமார் ரூ. 9 லட்சம் வரை கடன் வழங்கியது, கூட்டுறவுத் துறையின் உரிய அனுமதியின்றி தற்காலிக எழுத்தர்கள் நியமனம் செய்தது போன்ற புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, சரக துணை பதிவாளர் அமுதா இந்தப் புகார்கள் குறித்து சட்டப்பூர்வ விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கள அலுவலர் ராமச்சந்திரன் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதில்,கூட்டுறவு சங்கத்தில் நிதி முறைகேடு நடந்தது குறித்து போதிய ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சங்க உறுப்பினர்கள் 7 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் போதிய கோரமில்லாமல் சங்கம் செயல்படாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து துணை பதிவாளர் சிறப்புக் கூட்டம் நடத்தியபின்  சங்கத்தை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில்  கடந்த 24.2.2014 -ம் தேதி கல்வித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தை கலைக்க  கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் கே.வி.எஸ். குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், கூட்டுறவுத்துறை சங்கத்தை கலைத்தது கூட்டுறவு சங்க விதிகளின்படி செல்லாது என்பதால், அந்த நடவடிக்கை அந்த நடவடிக்கையை ரத்து செய்யப்படுவதாகவும்  சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டதால், 5 மாதங்களுக்குப்பின்  இப்பிரச்சினை கல்வித்துறையினர், கூட்டுறவுத்துறையினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: