Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 16 July 2014

மருத்துவ மாணவர்கள் கண்ணியமாக உடை உடுத்த அறிவுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதியதாக மருத்துவ படிப்பில் சேரும் மாணவ, மாணவிகள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியது:
மாணவர்கள் ஜூன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது. பேன்ட், முழுக்கை சட்டையும், ஷூவும் அணிய வேண்டும். மாணவிகளைப் பொருத்தவரை, சேலை, சுரிதார் ஆகியவ இரண்டு உடைகள் மட்டுமே அணிய வேண்டும். மேற்கத்திய உடைகள் அணிவதற்கு அனுமதி கிடையாது. தலை முடியை விரித்து போடக்கூடாது. இதனை பின்பற்றாத மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆடை கட்டுப்பாடு குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மூத்த மருத்துவ மாணவர்கள் கூறுகையில், ஆடை கட்டுப்பாடு என்பது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டது இல்லை. ஏற்கெனவே நாங்கள் பின்பற்றி வரும் ஒன்றுதான். மருத்துவ மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments: