Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 20 July 2014

ஐ.ஏ.எஸ். தேர்வு தள்ளிப்போக வாய்ப்பில்லை

ஆகஸ்டில் நடக்கவுள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) சிவில் சர்வீஸ் தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உட்பட மத்திய அரசின் நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளுக்கான தேர்வுகள் ஆக.24ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு முறையில் 2011ல் முதல்நிலை தேர்வில் நுழைவுத் தேர்வை நீக்கி விட்டு நுண்ணறிவுத் திறன் தேர்வும் (ஆப்டிடியூட்), 2013ல் வேறு சில மாறுதலையும் யு.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியது. அதன்பின் ஒரு முறை தேர்வு நடந்தது.

தற்போது இத்தேர்வு முறை கடினமாக உள்ளது, கிராம மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக்கூறி மாணவர்கள் ஜூலை 14ல் போராட்டம் நடத்தினர்; இது லோக்சபாவிலும் எதிரொலித்தது. இதையடுத்து தேர்வு முறை குறித்து ஆய்வு செய்ய யு.பி.எஸ்.சி. மற்றும் பணியாளர் நலத்துறையை மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் கேட்டுக் கொண்டார். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் சர்மா என்பவர் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி ஆய்வை துவக்கியுள்ளது. தேர்வு முறையில் மாற்றம் தேவையா, அதுவரை தேர்வை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.
அறிக்கை சமர்ப்பிப்பது தாமதமானால் தேர்வு முடிவு தள்ளிப் போகலாம். இப்போதைய நிலையில் தேர்வு தள்ளிப் போக வாய்ப்பு இல்லை.

No comments: